கோவை: தே.மு.தி.க. சார்பில் 'கேப்டன் முதியோர் ஓய்வூதியத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை பிரேமலதா விஜயகாந்த் வரும் 13-ம் தேதி கோவையில் தொடங்கி வைக்கிறார். அப்போது அவர் பொங்கல் பரிசுகளையும் வழங்குகிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13-ஆம் தேதி தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை வருகிறார். அன்று மாலை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு 4,100 பேருக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்குகிறார். மேலும் தமிழகத்தில் முதன்முறையாக :கேப்டன் முதியோர் ஓய்வூதியத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை தொடக்கி வைக்கிறார். அத்துடன் கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு வருட இன்சூரன்ஸ் பாலிசியையும் வழங்குகிறார்.
விழாவில் பங்கேற்பதற்காக கோவை வரும் பிரேமலதா விஜயகாந்துக்கு உற்சாக வரவேற்பளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தே.மு.தி.க மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் அறிவுரையின் பேரில், சாய்பாபா காலனி பகுதி பொறுப்பாளர்கள் ராஜா தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநகர் மாவட்ட பொருளாளரும், வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான சிவராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பிரேமலதா விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது மற்றும் ஓய்வூதியதாரர்களைத் தேர்ந்தெடுப்பது, பெண்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.