கோவையில், 100 சதவீதம் குறைகளற்ற வாக்காளர் பட்டியல்: தயாரிக்க அலுவலர்களுக்கு மாவட்ட மேற்பார்வையாளர் உத்தரவு!

கோவை: கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் குறைகளற்ற வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டுமென்று அலுவலர்களுக்கு மாவட்ட மேற்பார்வையாளர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் குறைகளற்ற வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டுமென்று அலுவலர்களுக்கு மாவட்ட மேற்பார்வையாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநரும், மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்பார்வையாளருமான கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேசப்பட்டவை குறித்து மேற்பார்வையாளர் கருணாகரன் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த நவம்பர் 16-ம் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர்கள் இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம். கோவை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடைபெற்றது.

இச்சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்களை, முறையாக ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எந்தவொரு தகுதியான வாக்காளரின் பதிவும் விடுபட்டுவிடக் கூடாது. தகுதியற்ற வாக்காளரின் பதிவும் பட்டியல்களில் இடம் பெற்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற வேண்டும். 100 சதவீதம் குறைகளற்ற வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், சப்-கலெக்டர் (பொள்ளாச்சி) வைத்திநாதன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பொறுப்பு முத்துராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...