பிளஸ் 1 மாணவியை ஆசைவார்த்தை காட்டி பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது, சிறை!

கோவை: கோவையில் 11-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவையில் 11-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார். ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்து படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவியை திடீரென்று காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியின் செல்போனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சண்முகம் (வயது 30), சிதம்பரத்தைச் சேர்ந்த ஏழுமலை (வயது 29) ஆகியோர் அடிக்கடி பேசியது தெரியவந்தது.

இதையடுத்து வேளாங்கண்ணி பகுதியில் இருந்த மாணவியை போலீசார் மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர். மாணவியிடம் விசாரித்தபோது ஏழுமலை, சண்முகம் ஆகியோர் தன்னை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார். போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மாணவியை அவர்கள் 2 பேரும் ஊட்டி, திருச்சி ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பேரில் செல்வபுரம் போலீசார் அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். 2 பேரும் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...