கோவை முத்தண்ணன் குளக்கரையில் 207 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்‌

கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 207 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.


கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 207 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

கோவை முத்தண்ணன் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டது.

இங்கு குடியிருந்த மக்களுக்கு கீரணத்தம், வெள்ளலூர், உக்கடம், மலுமிச்சம்பட்டி பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, 2,500 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைக் காலி செய்து விட்டு, அடுக்குமாடி வீடுகளுக்கு சென்றனர்.



அதன்பின் காலியாக இருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.



இதனிடையே, முத்தண்ணன் குளக்கரையில் 384 வீடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் காலி செய்யாமல் அப்பகுதியிலேயே வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் இந்த வீடுகளின் மின் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர். இதையடுத்து, அவர்கள் வீடுகளைக காலி செய்து விட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளுக்குச் சென்று விட்டனர்.



இதைத் தொடர்ந்து, அப்பகுதில் 207 வீடுகளை இன்று மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து அகற்றினர். மீதம் உள்ள வீடுகளை இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...