முதல்வரை வரவேற்க வைத்திருந்த வாழை மரம் சரிந்து விழுந்தது: வாகனத்தில் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்!

திருப்பூர்: முதல்வரை வரவேற்க வைத்திருந்த வாழை மரம் சாலையில் சரிந்து விழுந்தது. இதன் கீழே இருசக்கர வாகனத்துடன் சிக்கியவரை பொதுமக்கள் மீட்டனர்.


திருப்பூர்: முதல்வரை வரவேற்க வைத்திருந்த வாழை மரம் சாலையில் சரிந்து விழுந்தது. இதன் கீழே இருசக்கர வாகனத்துடன் சிக்கியவரை பொதுமக்கள் மீட்டனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவரை வரவேற்கும்விதமாக திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையோரங்களில் அ.தி.மு.க. கொடி மற்றும் வாழைமரங்கள் சாலையோரங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்தன.



அப்படி கட்டி வைக்கப்பட்டிருந்த வாழைகளில் குலைகளின் பாரம் தாங்காமல் திடீரென ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்தன. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் சிக்கிக் கொண்டார்.

உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் சரிந்த வாழைமரங்களை தூக்கி அவரை மீட்டனர். இந்தக் காட்சிகளை இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த நபர் படம் பிடித்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.



முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊத்துக்குளியில் பேசிவிட்டு சென்ற பிறகு அதுவரை காத்திருந்த பொதுமக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்த வாழை மரங்களில் இருந்து வாழைத்தார்களை கைகளால் பறித்து எடுத்துச் சென்றனர்.



ஆளாளுக்கு வாழை மரத்தைப் பிடித்து தொங்கியபடி வாழைத்தார்களை எடுக்க போட்டி போட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...