கொலக்கம்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பிணமாக மீட்பு!

நீலகிரி: கொலக்கம்பை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.


நீலகிரி: கொலக்கம்பை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை கிரேக்மோர் எஸ்டேட் குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக் பகத் (வயது 27). ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரது வீடு பூட்டிக்கிடப்பதால் சந்தேகமாக இருப்பதாக அருகில் குடியிருப்பவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.

போலீசார் சென்று பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு திறந்திருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அசோக் பகத்தின் மனைவி சுமதி குமாரி (வயது 24) கழுத்து அறுபட்டநிலையில் இறந்து கிடந்தார், இவர்களது உடல் அருகே அசோக் பகத் எழுதி வைத்த கடிதம் ஒன்று காணப்பட்டது. அதில் கடந்த 21.12.2020 முதல் அதே குடியிருப்புப் பகுதியில் லட்சுமணன் மகளான பிரீத்திகுமாரி (வயது 8) என்பவர் காணாமல்போனதாகவும், அருகில் குடியிருப்பவர்கள் இவர்களிடம் சந்தேகப்பட்டு விசாரித்ததால் மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாகவும் அக்கடிதத்தில் கூறியிருந்தார்.

பிறகு அசோக் பகத்தின் குழந்தைகளைத் தேடியபோது வீட்டின் பின்புறம் உள்ள சிறிய தண்ணீர் தொட்டியில் ரேஷ்மா (வயது 4) என்ற பெண் குழந்தை தலையில் தாக்கப்பட்ட நிலையில் தண்ணீரில் இறந்த நிலையில் கிடந்தார். பிறகு அதே குடியிருப்பில் இளஞ்சியம் என்பவர் வீட்டில் யாரும் இல்லாததால் அந்த வீட்டின் பின்புறம் ஜன்னல் வழியாக நுழைந்து வீட்டின் முற்றத்தில் அசோக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதே அறையில் அவரது மகன் அபை (வயது 8) என்பவர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.



இது சம்பந்தமாக கொலக்கொம்பை போலீசார் வழக்கு பதிந்து உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...