மாநகராட்சியை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் 600க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: கோவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது.


கோவை: கோவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது.

கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அதற்காக கோவையில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் போன்ற நீர் நிலைப் பகுதிகளிலும் பந்தய சாலை பகுதி அனைத்தும் சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதாக திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.



இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையின் தடையை மீறி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், 600க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு, அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணியை கண்டித்தும், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டிக்கின்ற வகையில் உள்ள பதாகைகள் மற்றும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் கைது, அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடைபெறும் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தரமான கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை, இதில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதனை திமுக வன்மையாக கண்டிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்தங்கள் எஸ் பி வேலுமணியின் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு பினாமிகளுக்கு முறைகேடுகளாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் மதிப்பிலான முறைகேடுகள் நடந்துள்ளது, மாநகராட்சியின் 4 ஆயிரம் பக்க தீர்மானங்களை மறைத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஊழல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி. நாச்சிமுத்து, மெட்டல் எம். மணி, வெ.நா.உதயகுமார், வழக்கறிஞர் பி. ஆர். அருள்மொழி, வழக்கறிஞர் ஜி.டி.ராஜேந்திரன் மு.இரா.செல்வராஜ், கோட்டை அப்பாஸ், ஆ.கண்ணன், பா.ஆனந்தன், மு.கா.உமாமகேஸ்வரி,மா.செல்வராஜ், சிங்கை பிரபாகரன், கமல் நா. மனோகர், இல.தேவசீலன், கே.ஆர்.ராஜா, கா.மனோகர், சி.கே.கனிமொழி, கல்பனாசெந்தில், ந.சித்ரகலா, பொதுக்குழு உறுப்பினர்கள் மு. மா. ச. முருகன், சி.டி.டி.பா.ராஜராஜேஸ்வரி, சி.வி.தீபா, மற்றும், மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், முன்னாள் கோவை மாநகராட்சி மேயர் கணபதி ப. ராஜ்குமார், பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள் வி. ஐ. பதுருதீன், மார்க்கெட் எம். மனோகரன், ஆர்.எம்.சேதுராமன், ப.பசுபதி, எஸ்.எம்.சாமி, சிங்கை மு.சிவா, ஷேக் அப்துல்லா, வே.பாலசுப்பிரமணியம், மா.நாகராஜ், இரா.சேரலாதன், மற்றும் நா. முருகவேல், வழக்கறிஞர்கள் வி. ரவிச்சந்திரன், ஆர்.விஜயராகவன் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...