கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்தும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர், தேவராயபுரம் பகுதியில் தி.மு.க சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக கட்சியின் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்த பூங்கொடி என்பவர் கலந்து கொண்டார். இவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற முயன்றபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரத்தில் பூங்கொடி மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த முனி, ராமன், மகேஸ்வரி ஆகியோரும் கடுமையாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி எஸ்.சி எஸ்.டி பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையத்தில் விண்ணப்ப மனு அளித்தார். இந்த மனு மீது கமிஷன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக வரும் 15 நாட்களுக்குள் தமிழக டி.ஜி.பி மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி அருளரசு ஆகியோர் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், இது தொடர்பாக போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்தும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.