கோவை: கோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் இருவரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் 97வது வார்டில் மாநகராட்சி வரிவசூல் மையம் உள்ளது. இன்று மதியம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது புதிய வீட்டுக்கு வரி போடுவதற்காக சென்றார்.
அப்போது, அங்கே பணியில் இருந்த மாநகராட்சி வரி வசூல் அலுவலர் கவுஸ் மொய்தீன் (45) என்பவர் முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதையடுத்து, செந்தில்குமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளார். அப்போது, உங்கள் வீட்டில் விதிமுறை மீறல் அதிகமாக இருக்கிறது. அதிக அபராதம் போட வேண்டியிருக்கிறது. வீட்டை இடிக்கும் சூழலும் உள்ளது. எனவே பணம் அதிகமாக கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், மற்றொரு மாநகராட்சி தற்காலிக உதவியாளர் தனபால் என்பவரும் பணம் கொடுத்தால்தான் வரி போடுவோம் எனக் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, செந்தில்குமார் 18,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கவுஸ் மொய்தீன் மற்றும் தனபால் ஆகியோரை மடக்கிப் பிடித்து கைது செய்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகின்றனர்.