திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இளைஞரை இளம்பெண் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் 23 வயது பெண் ஒருவர் இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே ஊரைச் சேர்ந்தவரும், உறவினருமான அஜித் குமார் (25), என்ற வாலிபர் கையில் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றார். மறைவான இடத்தில் வைத்து என்னுடைய ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதில் அந்தப் பெண் அவரை தாக்கி, அவர் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். அந்த பெண் மீது கொலை வழக்கு 302 பிரிவு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், இளம்பெண் அளித்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சோழவரம் காவல் துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து காவல் நிலையத்துக்கு நேரில் வந்த ஐ.பி.எஸ் அதிகாரி அரவிந்தன், இளம்பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் பதிவு செய்த கொலை வழக்கை, ஐ.பி.சி பிரிவு 100 தற்காப்புக்காக செய்த கொலை என மாற்றி அந்த பெண்ணை விடுவித்தார். மேலும், எஸ் பி அரவிந்தன் அந்த பெண்ணை பாராட்டி அனுப்பி வைத்தார்.
இதனை தொடர்ந்து, எஸ்.பி அரவிந்தன் ஐ.பி.எஸ் அவர்களுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.