கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெங்காயம் மழையில் நனைந்து சேதம் - வெங்காய மொத்த வியாபாரிகள் வேதனை!

கோவை: எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் போதிய இட வசதி இல்லாததால் இலட்சக்கணக்கான வெங்காயம் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக கோவை மாவட்ட வெங்காய மொத்த வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



கோவை: எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் போதிய இட வசதி இல்லாததால் இலட்சக்கணக்கான வெங்காயம் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக கோவை மாவட்ட வெங்காய மொத்த வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி 600 முதல் ஆயிரம் டன் வரை பெரிய வெங்காயம் மார்க்கெட்டுக்குள் வந்து பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், போதுமான இடவசதி இல்லாததால் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் சேதமடைந்துள்ளதாக வெங்காய வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.



இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட வெங்காய மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த சில மாதங்களாக கோவிட் தொற்று காரணமாக மார்க்கெட் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது முழுவீச்சில் மார்க்கெட்டில் உள்ள இடத்தில் செயல்பட்டு வருவதாகவும் ஆனால், போதிய இடவசதி இல்லாததால் மழையால் வெங்காயம் சேதமடைந்து வருவதாக கூறினார்.

குறிப்பாக, மார்க்கெட் வளாகத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வசதி கூட வியாபாரம் செய்யும் எங்களுக்கு இல்லை என கூறிய அவர், இதற்கு மாநகராட்சி தலையிட்டு வெங்காய மொத்த வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளை எம்.ஜி.ஆர் மார்க்கெட் வளாகத்தில் செய்து தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...