பொங்கல் பரிசாக வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆவணம் செய்ய வலியுறுத்தல்!

கோவை: பொங்கல் பரிசாக வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என கோவையில் நடைபெற்ற வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


கோவை: பொங்கல் பரிசாக வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என கோவையில் நடைபெற்ற வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொடர் போராட்டத்தை அறிவித்தார்.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னையில் இரயில் மறியல் போராட்டம், மத்திய அரசு அலுவலகம் முன்பு போராட்டங்களும், இரண்டாம் கட்ட போராட்டமாக கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கும் போராட்டமும், மூன்றாம் கட்டமாக பேரூராட்சி அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டமும், நான்காம் கட்டமாக ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக 5ம் கட்டமாக இன்று மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் மனு அளிக்கும் பெருந்திரள் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கோவை பாமக மாநகர் மாவட்ட சார்பாக கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.



முன்னதாக மாநில துணை பொதுச்செயலாளர் கோவை ராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தலைமையில் கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கட்சி கொடி, வன்னியர் சங்க கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கோசங்கள் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகம் சென்ற பாமகவினர் மாநகராட்சி உதவி ஆணையர் மோகன சுந்தரியிடம் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரும் மனுவினை அளித்தனர்.

முன்னதாக இந்த பெருந்திரள் போராட்டம் தொடர்பாக பேசிய பாமக இளைஞர் அணி துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, மருத்துவர் அய்யா அறிவித்த இந்த போராட்டம் மிக விரைவில் வெற்றி அடைய வேண்டும், தமிழக அரசு உடனடியாக வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க ஆவணம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழக அரசு பொங்கல் பரிசாக வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்த அவர், இத்தனை கட்ட போராட்டத்திற்கு பிறகும் தமிழக அரசு செவி சாய்க்காத பட்சத்தில் போராட்டம் வேறு வடிவத்தில் வலுவான போராட்டத்தை பாமக முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...