பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய புள்ளிகளை கைது செய்ய வலியுறுத்தி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பின் பலமாக இருக்கும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய வலியுறுத்தி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பின் பலமாக இருக்கும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய வலியுறுத்தி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக நேற்று பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் உட்பட மூன்று பேரை சிபிஐ கைது செய்தது.

இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பின்புலமாக செயல்படும் முக்கிய புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக அமைப்புகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.



இந்நிலையில், இது தொடர்பாக பொள்ளாச்சியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வாங்கித் தரவேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு பின்புலமாக இருக்கும் முக்கிய புள்ளிகளை இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் என்றும், இந்த பாலியல் வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை கைது செய்ய வலியுறுத்தி வரும் 10ம் தேதி பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு திமுக எம்.பி கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...