திருப்பூர்: வேளாளர் பெயரை மாற்று சமூகத்தினருக்கு பரிந்துரைத்ததற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் வேளாளர் உரிமை மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பட்டியல் சமூக பிரிவில் உள்ள பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, தேவேந்திரகுலத்தார், வாதிரியார், கடையர் ஆகிய 7 சமூகங்களை ஒருங்கிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கக் கோரி வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இதில் வேளாளர் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு மறுபரிசீலனை செய்யும் முன் இந்த கோரிக்கையை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக வேளாளர் உரிமை மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.