கோவையில் விடாது பெய்த மழை: குடை பிடித்தபடி கலெக்டர் நேரில் ஆய்வு!

கோவை: மழை விடாது பெய்து கொண்டிருந்த நிலையில் குடை பிடித்தபடி வந்த கலெக்டர் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: மழை விடாது பெய்து கொண்டிருந்த நிலையில் குடை பிடித்தபடி வந்த கலெக்டர் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்தார்.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இரவு 7 மணிக்கு திடீரென கோவை மாநகர் முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது. முதலில் மழை லேசாக தூறத் தொடங்கி நேரம் செல்லச் செல்ல விஸ்வரூபம் எடுத்தது. சில மணி நேரங்கள் பெய்யும் என காத்திருந்தவர்கள் நேரம் செல்லச் செல்ல கன மழையாக மாறியதால் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதனால் அனைத்துப் பணிகளும் முடங்கின. இந்நிலையில் தொடர் மழை காரணமாக மாநகரத்தின் நிலவரங்கள் என்னவென்று நேரில் ஆய்வு செய்ய விரும்பிய கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி வருவாய் அதிகாரிகளுடன் கோவை சங்கனூர் கால்வாய் பகுதி, அவிநாசி ரோடு மேம்பாலம், திருச்சி ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு, அரசு மருத்துவமனை பகுதி, ரயில் நிலையப் பகுதி, உக்கடம் குளம் என அனைத்துப் பகுதிகளிலும் நள்ளிரவு 1 மணியளவில் நேரில் சென்று மழை பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.



கலெக்டரின் இந்த ஆய்வுப்பணியின்போதும் மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. மழை நீரின் அளவு அதிகமாக இருந்ததால் கலெக்டர் காரிலிருந்து இறங்கி குடை பிடித்தபடி ஒவ்வொரு இடங்களையும் ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கனமழை தொடர்ந்து பெய்ததால் மாநகரத்தின் நிலவரத்தை அறிந்துகொள்ள நேரில் வந்துள்ளேன். வருவாய்த்துறை மூலமாகவும், மாவட்ட நிர்வாகம் மூலமாகவும், அமைச்சர் உத்தரவின் பேரிலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பாகவும் உடனடியாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்துக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

மழையினால் பாதிப்பு ஏற்படக் கூடிய மக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக நிவாரணங்கள் மற்றும் உதவிகள் செய்ய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...