கோவையில் கன மழை; ஜனவரி மாதம் இதுவரை எந்த ஆண்டிலும் இவ்வளவு மழை பதிவானதில்லை, என தகவல்.
கோவை: கோவையின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல், இன்று காலை வரை விடிய விடிய கன மழை கொட்டியது தீர்த்தது. இதனால் சாலைகள், மேம்பாலங்களின் கீழ் பகுதிகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
எப்போதும் இல்லாத அளவுக்கு, கோவை விமான நிலைய பகுதியில் ஒரே நாளில் 113 மிமீ மழை பதிவாகியுள்ளது இதுவே முதல் தடவை என்றும், ஜனவரி மாதம் இதுவரை எந்த ஆண்டிலும் இவ்வளவு மழை பதிவானதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் சாரல் மழையாக பெய்ய ஆரம்பித்த மழை, சிறிது நேரத்திலேயே கன மழையாக பெய்யத் தொடங்கியது. குறிப்பாக,, உக்கடம், ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம், ராமநாதபும், பீளமேடு, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் கோவை ரயில்நிலைய சாலை, லங்கா கார்னர், அவினாசிரோடு மேம்பாலத்தின் கீழ்பகுதி, ரேஸ்கோர்ஸ், கோவை-திருச்சி ரோடு, என்.டி.சி.மில் ரோட்டில் இருந்து புரூக்பாண்ட் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்திலும் தண்ணீர் தேங்கியதால், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் அவதி அடைந்தனர். கோவை- திருச்சி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணி காரணமாக அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், நேற்று பெய்த மழையால் அந்த சாலை சேறும் சகதியுமாக மாறியது.
கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் காரணமாக சாலைகள் முற்றிலும் சேமடைந்துள்ளதால் அங்கும் வாகன ஒட்டிகள் அவதியடைந்தனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மரம் ஒன்று வேறுடன் சாய்ந்தது. இதையடுத்து, வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கோவையில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும், மழையால் மாவட்டத்தில் குளிர்ந்த காலநிலை காணப்படுகிறது.
கோவை புலியகுளம் அம்மன்குளம் ராஜீவ் நகரில் உள்ள ஒரு பழையவீடு ஒன்று இடிந்தது. பலத்த மழையால் அச்சம் அடைந்தவர்கள் முன்கூட்டியே வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதேபோல், லட்சுமி மில் சிக்னல் பகுதியில் உள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கோவை சுங்கம் பகுதியில் மழைநீர் 3 அடி உயரம் வரை தேங்கியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.