வெவ்வேறு சம்பவங்களில் புதிதாக திருமணமான பெண்கள் தற்கொலை; ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு.

கோவை: கணவர்களுடன் கோபித்துக்கொண்டு தாய் வீடு திரும்பிய பெண்கள் 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கணவர்களுடன் கோபித்துக்கொண்டு தாய் வீடு திரும்பிய பெண்கள் 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஜோதிபுரம் செல்வ விநாயகர் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரூபனா (வயது 26) துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில் ரூபினா கடந்த சில நாட்களுக்கு முன்பு திரு.வி.க நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து வசித்து வந்தார்.

நேற்று ரூபனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அரிசியை குக்கரில் போட்டுவிட்டு அதில் விசிலை மாட்ட மறந்துவிட்டார். இதனால் குக்கரிலிருந்து சாப்பாடு வெளியே தெறித்து விழுந்தது. இதைக்கண்ட அவரது தாயார் கோபமடைந்த `உனக்கு உணவு சமைக்கக்கூடத் தெரியாதா?' என ரூபினாவைக் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தியடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 16 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

இதுபோல கோவை இடையர்பாளையம் நீலியம்மன் நகரைச் சேர்ந்தவர் ரகு. கூலித்தொழிலாளியான இவரது மனைவி காயத்ரி (வயது 28). இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காயத்ரி தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...