கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளில் தரமற்ற கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் நடப்பதைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நாளை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கார்த்திக் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவையில் 60 கோடி ரூபாய் செலவில் உக்கடம் பெரியகுளம், 40 கோடியில் வாலாங்குளம், 30 கோடியில் செல்வ சிந்தாமணி குளம், 12.45 கோடியில் சிங்காநல்லூர் குளம் போன்றவற்றில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வருவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. அதில் உக்கடம், பெரியகுளம் வடக்குப் பகுதியில் 25 அடி தூரம் மண்ணைப் போட்டு மூடி பணிகள் நடந்துள்ளன. குளக்கரையை மேம்படுத்தும்போது குளங்களின் அளவைக் குறைக்கக்கூடாது என்று கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. அந்த உத்தரவை மீறி குளக்கரை பகுதி மூடப்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் சாக்கடை நீர் முழு அளவில் தேங்கியுள்ளது. அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. துர்நாற்றம் வீசும் இடத்தில் மக்கள் எப்படி செல்ல முடியும்? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளில் தரமற்ற கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் நடப்பதாகத் தெரிகிறது. இதைக் கண்டித்தும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வணிக கடைகள் அமைக்கும் முயற்சியைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.