கோவை: போத்தனூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று மதியம் வீட்டில் இருந்த சிறுமி, தனது தாயிடம் சாப்பிட பொரி வாங்கி தருமாறு கூறி உள்ளார், பிறகு வாங்கி தருகிறேன் என தனது தாய் கூறி அவரை கோபமாக திட்டியதால், கோபித்துக் கொண்டு அந்த சிறுமி அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, சிறுமியை அழைப்பதற்காக அவரது தாயார் சரஸ்வதி அங்கு சென்றார். ஆனால், ஒரு அறைக்குள் உள் பக்கமாக தாழிட்டு கொண்ட சிறுமி கதவை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவள், தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்த சரஸ்வதி, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த தாயார் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று கதவைத் திறந்த போது, கதவின் கைப்பிடியில் சிறுமி தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின், தகவலறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், 174 சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.