கோவை: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களின் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடத்த வேண்டுமென்று பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டாக்டர். ராஜேஷ்கண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளின் பாதுகாப்புக்காக கால்நடைத்துறை சார்பில் காளையின் உடல்நிலை மற்றும் வயது கருத்தில் கொள்ளப்பட்டு பரிசோதனைகள் மற்றும் சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக போட்டியின்போது காளையை தார்ஊசியால் குத்தக்கூடாது. மிளகு மற்றும் மிளகாய்ப்பொடிகளை காளைகளின்மீது தூவக்கூடாது. காளைகளுக்கு மது உள்ளிட்ட போதைப்பொருட்களைக் கொடுக்கக்கூடாது என்பதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி ஆய்வு, உயிர்காக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் ஒழுங்காகக் கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் ஆண்டுதோறும் உயிரிழப்புகளும், காயங்களும் அதிகரித்து வருகின்றன. இதனைத்தடுக்க மாடுபிடி வீரர்களுக்கு பிசியோதெரபி மருத்துவர்கள் பரிந்துரையுடன் உயிர் காக்கும் கவசங்களான வயிற்றுக் கவசம், நெஞ்சுக் கவசம், சீறுநீரகக் கவசம் ஆகியவற்றை வழங்க வழிவகை செய்ய வேண்டும். இதன்மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும். அதேபோல் எலும்பு முறிவு மற்றும் மூட்டு விலகாமல் இருக்க முழங்கால் மற்றும் முழங்கை , கணுக்காலைப் பாதுகாக்க பாதுகாப்புப் பட்டைகளை வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
போட்டி ஆரம்பிக்கும் முன்பே பிற விளையாட்டுப் போட்டிகளைப்போல மாடுபிடி வீரர்களின் உடல்தகுதியை பிசியோதெரபி மருத்துவரின் பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும். உடல் பலவீனமான குறிப்பாக இதயம், நுரையீரல் பிரச்சினைகள், உயர் ரத்த அழுத்தம் உள்ள மாடுபிடி வீரர்களை அனுமதிக்கக்கூடாது.போட்டியின்போது மாடுபிடி வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு நியமிக்க வேண்டும். இதில் பிற விளையாட்டுப் போட்டிகளைப் போலவே பொது மருத்துவர் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். வீரர்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைவை சரிசெய்ய குளுக்கோஸ் நீர் போன்றவற்றை மருத்துவக்குழுவினர் தயாராக வைத்திருக்க வேண்டும்.
போட்டி நடைபெறும் இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களை அதிக எண்ணிக்கையில் நிறுத்த வேண்டும். மாடுபிடி வீரர்களின் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பிசியோதெரபி மருத்துவர்கள் தலைமையில் பயிற்சி முகாம்களை நடத்த தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படாமல் தடுக்கலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்ற 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவருவதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.