நடுமலை எஸ்டேட் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி: பகுதி மக்கள் மகிழ்ச்சி!

கோவை: நடுமலை எஸ்டேட் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.


கோவை: நடுமலை எஸ்டேட் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உடனடியாக சாலையை செப்பனிட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.



இதைத்தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அதன் காரணமாக நெடுஞ்சாலைக்குச் சொந்தமான வெள்ளமலை பகுதியிலிருந்து வால்பாறை டவுன் பகுதி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலை நடுமலை, பச்சை மலை, கருமலை வழியாக 40-வது கொண்டை ஊசி வளைவு வழியாக பொள்ளாச்சி சாலையை இணைக்கும் பகுதியாகும். தார்ச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருவது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...