கோவை: பொன்னாண்டாம்பாளையம் குக்கிராம பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் தொடங்கிய காலவரையற்ற உண்ணாவிரதம் கலெக்டர் உறுதியளித்ததையடுத்து திரும்பப் பெறப்பட்டது.

நான்கு உள்ளாட்சி அமைப்புகளாக சிதறிக் கிடக்கும் பொன்னாண்டாம்பாளையம் குக்கிராமத்தை ஒரே உள்ளாட்சி அமைப்பின் கீழ் கொண்டு வர வலியுறுத்தி பொதுமக்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரத்தைத் தொடங்கினர். இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் மற்றும் காவல்துறையினர் போராட்டக் குழுவினருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினர். அதன்படி அவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் பேசினர். அப்போது பொன்னாண்டாம்பாளையத்தில் உள்ள அவசர அத்தியாவசியத்தேவைகளை கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனடியாக நிறைவேற்றித் தருவதாக கலெக்டர் உறுதியளித்தார்.
மேலும் ஒரே உள்ளாட்சி அமைப்பின் கீழ் கொண்டு வருவது தொடர்பான கோப்பு விவரங்களை 10 நாட்களில் கூறுவதாகவும், இரண்டு மாத காலக் கெடுவுக்குள் அரசாணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கலெக்டர் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தை வெற்றிபெறச் செய்ததற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போராட்டக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.