பொன்னாண்டம்பாளையம் கிராமத்தில் 4 உள்ளாட்சி அமைப்புகள் வருவதால் ஒரே உள்ளாட்சி அமைப்பின் கீழ் கொண்டு வர கோரி கிராம மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!

கோவை: கோவை பொன்னாண்டம்பாளையம் கிராமத்தில் 4 உள்ளாட்சி அமைப்புகள் வருவதால் அதனை ஒரே உள்ளாட்சி அமைப்பின் கீழ் கொண்டு வர கோரி அப்பகுதி கிராம மக்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.


கோவை: கோவை பொன்னாண்டம்பாளையம் கிராமத்தில் 4 உள்ளாட்சி அமைப்புகள் வருவதால் அதனை ஒரே உள்ளாட்சி அமைப்பின் கீழ் கொண்டு வர கோரி அப்பகுதி கிராம மக்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.



அப்போது, அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த திமுக சுற்றுச்சூழல் அமைப்பின் மாநில பொறுப்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி விரைவில் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து, திமுக ஆட்சி அமைந்தவுடன் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேய சிவசேனாபதி, அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெண்களுக்கும் மனித குலத்திற்கும் எதிரான அரசாக உள்ளது. பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கை திமுகவினர் தான் முதன்முதலில் வெளிப்படுத்தி போராட்டம் மேற்கொண்டனர்.



தற்போது பொள்ளாச்சி அதிமுக மாணவர் அணி நகர செயலாளர் அருளானந்தம் சிபிஐயால் கைது செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. காவல்துறை விசாரணை மேற்கொண்டு இருந்தால் இந்த கைது நடவடிக்கை இருந்திருக்காது அருளானந்தம் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அனைத்து போஸ்ட்டர்களிலும் அமைச்சருடன் அவருடைய புகைப்படம் உள்ளதால் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், குற்றவாளிகளுக்கு உடந்தையாக எஸ்.பி.வேலுமணி இருக்கிறார் என்பதையும் கண்டுபிடிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.



அதேபோல, பசு மாட்டிற்கும் எருமை மாட்டிற்கு வித்தியாசம் தெரியாத அமைச்சர் தான் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் என்று விமர்சனம் செய்த அவர், நாட்டு மாடுகளை அழிக்கும் நோக்கில் அமைச்சர் செயல்பட்டு வருவதாகவும் கால்நடை துறையில் பல ஆயிரம் கோடி மோசடி நடைபெற்று உள்ளதால் அது குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...