கோவை உக்கடம் மஜித் காலனியில் வழிபாட்டுத் தலங்களை அகற்றும் பணி நிறைவு!

கோவை: கோவை உக்கடம் மஜித் காலனியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்களை இடித்து அகற்றும் பணி முடிவடைந்தது.


கோவை: கோவை உக்கடம் மஜித் காலனியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்களை இடித்து அகற்றும் பணி முடிவடைந்தது.

கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், குளக்கரைகளில் நடைபாதை, சிறுவர்கள் விளையாட பிளேங் ஜோன், சிற்றுண்டிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, குளக்கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வாலாங்குளத்தை ஒட்டியுள் மஜித் காலனி பகுதியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. மேலும் அங்கிருந்த 2 அம்மன் கோயில்கள், மதுரை வீரன் கோயில், விநாயகர் கோயில், பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டு தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள் போன்றவைகளை கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல் இடிக்கும் பணி துவங்கியது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் வாலாங்குளத்தினை காண வரும் மக்கள், தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக, அங்கு 200 இருசக்கரக வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன், வாகன நிறுத்தம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...