பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க பிரமுகர்கள் கைது..! நீதிமன்ற வளாகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு அ.தி.மு.க பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு அ.தி.மு.க பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் இருக்கின்றனர். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹேரேன் பால் (29), பாபு (எ) பைக் பாபு (27) மற்றும் அருளானந்தம் (34 ) ஆகிய மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரையும் ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார்.



முன்னதாக, குற்றவாளிகளை கோவை நீதிமன்றத்திற்குள் இருந்து வெளியே அழைத்து வருகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் கோவை நீதிமன்றத்தின் ஒன்றாவது வாயில் முன்பு அமர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாகவும், உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதனால் நீதிமன்றம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட அருளானந்தம், பாபு, ஹெரன் பால் ஆகிய மூவரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...