கோவை: பெண்களின் எதிரி அ.தி.மு.க என்ற தலைப்பில் திமுக எம்.எல்.ஏ, கார்த்திக் முகநூலில் பெண்களுக்கு எதிராக அதிமுக செயல்படும் விபரங்களை முழுமையாக பதிவு செய்துள்ளார்.
கோவை: பெண்களின் எதிரி அ.தி.மு.க என்ற தலைப்பில் திமுக எம்.எல்.ஏ, கார்த்திக் முகநூலில் பெண்களுக்கு எதிராக அதிமுக செயல்படும் விபரங்களை முழுமையாக பதிவு செய்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
நாட்டையே அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் இருக்கின்றனர். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, ஆகியோர் சி.பி.ஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணி செயலாளராக இருந்து வருகிறார்.

இதனிடையே, தற்பொழுது சமூக வலைதளங்களில் மேற்கண்ட குற்றவாளி அருளானந்த்தம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுகவின் நிர்வாகிகளோடு நின்று நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் திமுக கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க வந்த பெண்ணை வெளியே அனுப்பியதற்காக பொங்கிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு காரணமானவர்களை கட்சியில் கூடவே வைத்திருப்பதற்கு இப்போது வாய் திறப்பாரா?
ஐயோ பெண்களுக்கு நீதி இல்லையா ? நியாயம் இல்லையா ? என்றெல்லாம் நீலிக்கண்ணீர் வடித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, இந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு அதிமுக அமைச்சர் என்ற முறையில் இப்பொழுது என்ன செய்யப் போகிறார்? பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி.
தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம் தொடங்கி இன்று வரை பெண்களுக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கும் ஒரே கட்சி அதிமுக! பெண்களின் எதிரி அதிமுக என்பது மற்றும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.
இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கோவை மாநகர் மாவட்ட கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.