இந்தியாவில், புத்தாண்டு தினத்தில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்ததாக யுனிசெப் அறிவிப்பு!

கோவை: இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.


கோவை: இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

2021 புத்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தது. அன்றைய தினத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. புத்தாண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டிலும் அன்றைய தினத்தில் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளது.

புத்தாண்டில் பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் 10 நாடுகளில் பிறந்துள்ளன. இதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இதன்படி புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்துள்ளன. இதையடுத்து சீனாவில் 35 ஆயிரத்து 615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேசியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006, அமெரிக்காவில் 10 ஆயிரத்து 312, எகிப்தில் 9 ஆயிரத்து 455, வங்காளதேசத்தில் 9 ஆயிரத்து 236, காங்கோவில் 8,640, குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

இந்த ஆண்டில் உலகம் முழுவதும் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் மதிப்பிட்டுள்ளது. புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்திற்கு முன் இருந்ததைவிட மிக வித்தியாசமான உலகில் நுழைந்துள்ளார்கள். அதை மறுபரிசீலனை செய்ய புத்தாண்டு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது என்று யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்றி ட்டா போர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...