கோவை: கோவை சிங்காநல்லூரில் கார் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.

இந்த விபத்து பற்றி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 55), இவர் தனது மனைவி மற்றும் பேரன் ஆதவன் ஆகியோருடன் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். பாலசுப்ரமணியத்தின் மனைவி மருத்துவமனையில் இருந்தார். பாலசுப்ரமணியம் மற்றும் செல்வம் மருத்துவமனை எதிரே உள்ள வங்கிக்குச் செல்வதற்காக நேற்று மாலை அந்த சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது கோவையில் இருந்து கண்ணம்பாளையம் நோக்கிச் சென்ற கார் அவர்கள் 2 பேர் மீதும் மோதியது. அந்த கார் ரோட்டில் நடந்து சென்ற ஒண்டிப்புதூரில் சேர்ந்த சத்யராஜ் (வயது 20) என்ற வாலிபர் மீதும் மோதியது.

மற்றொரு கார் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி நின்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் சிறுவன் ஆதவன் வாலிபர் சத்யராஜ் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். தாத்தா பாலசுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய காரை கண்ணம்பாளையத்தில் சேர்ந்த ரமேஷ் (வயது 42) என்பவர் ஓட்டியுள்ளார். மனைவி மற்றும் மகனுடன் கோவையில் இருந்து பொருட்களை வாங்கிவிட்டு கண்ணம்பாளையத்தை நோக்கிச் சென்றபோது காரை நிறுத்த பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்து விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். காரை ஓட்டிச்சென்ற ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரில் இருந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகன் உயிர் தப்பினர். போக்குவரத்து நிறைந்த சிங்காநல்லூர் பகுதியில் கார் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.