கோவை: தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளராக இருப்பவர் கு.ராமகிருஷ்ணன். இவர் கோவையில் நடைபெறக்கூடிய அனைத்து சிறுபான்மை மக்களுக்கான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவைகளில் முன்னெடுத்து தலைமை தாங்கி கலந்துகொண்டு பெரியாரின் கொள்கையை தீவிரமாக மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் மிகுந்தவர்.
இந்நிலையில், ராமகிருஷ்ணனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மூச்சுத் திணறல், காய்ச்சல் தென்பட்டது. இதனையடுத்து, அவர் தாமாக முன்வந்து கொரோனோ பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது.
முடிவில் ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.