வால்பாறையில் காபி விளைச்சல் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

கோவை: வால்பாறையில் காபி விளைச்சல் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் காபி விளைச்சல் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆங்கிலேயர் காலத்தில் 1862ம் ஆண்டு முதல் விவசாய பயிராக காப்பி பயிரிடப்பட்டு விவசாயம் நடைபெற்று வந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து நோய்த்தொற்று மற்றும் விளைச்சல் குறைவு காரணமாகவும் தேயிலை வரவு காரணமாகவும் பெரும்பாலான பகுதிகள் காப்பி அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.



இதனால் தற்போது 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே காபி விவசாயம் நடைபெற்று வருகிறது.



இதனிடையே, வால்பாறையை அடுத்த வரட்டுப் பாறை எஸ்டேட் பகுதியில் காபி விளைச்சல் அதிகரித்து செடிகளில் காப்பி பழங்கள் பழுத்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த பயிரானது டாடா காபி எஸ்டேட்டில் ஏராளமான அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

இந்த பயிரானது வருடத்திற்கு ஒருமுறை விளைச்சல் தரக்கூடியது. பதப்படுத்தும் பணியில் ஏராளமான பணியாளர்களை வைத்து பதப்படுத்தி பின்னர் தமிழகத்தில் தேனி மாவட்டம் மற்றும் பெங்களூர் பகுதிகளுக்கு பதப்படுத்தப்பட்ட காபிக் கொட்டைகளை அரைத்து பதப்படுத்தி, பின்னர் அண்டை நாடுகளான ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதன் காரணமாக பழுத்த பழங்களை அறுவடை செய்வது களத்திற்கு கொண்டு செல்வது, காப்பி பழங்களை அரைத்து உலர வைத்து பதப்படுத்தும் பணியில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மகசூல் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...