கோவை: கோவை - கேரளா எல்லையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கணக்கில் வராத 51 ஆயிரத்து 80 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அங்கு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர், ஓய்வுபெற்ற வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, ஒரு பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கேரளாவில் இருந்து கோவை வரும் வழியில் உள்ள முதல் சோதனைச்சாவடியில் இன்று மாலை 6.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி கணேஷ் பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின்போது கணக்கில் வராத மற்றும் ரசீது போடப்படாத 51 ஆயிரத்து 80 ரூபாய் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அங்கு பணியிலிருந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், உதவியாளர் சீனிவாசன், இளநிலை உதவியாளர் பத்மா, ஓய்வுபெற்ற போக்குவரத்து அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஆகியோரைப் பிடித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த சோதனைச் சாவடியில் தொடர்ந்து வாகனங்களிடம் லஞ்சம் பெறுவதாக போலீசாருக்கு தொலைபேசி மூலமாக ரகசிய தகவல் கிடைத்ததன்பேரில் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டதாக டி.எஸ்.பி கூறினார். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் போக்குவரத்து சோதனைச் சாவடிகளை குறிவைத்து சோதனை செய்து வருகின்றனர்.