கோவை: விபத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர் உள்ளிட்ட கூடுதல், 'பிட்டிங்'குகளை அகற்றுவதற்கு கடந்த நவம்பர் 10 ஆம் தேதி தமிழக தலைமை செயலகம் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியது.

இது குறித்து, இன்று, ஹிந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஏர் பேக் (Air bag) உள்ள வாகனங்களில் உள்ள பம்பர்களை அகற்றுமாறு உச்சநீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், ஏர் பேக் இல்லாத டாடா ஏஸ் (Tata Ace) உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களின் பம்பர்களும் அகற்றப்பட்டு வருகிறது.
அவ்வாறு, அந்த வாகனங்களில் இருந்து பம்பரை அகற்றாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஏழ்மை நிலையில் உள்ள ஒட்டுநர்களுக்கு இது மிகப்பெரிய பேரிடராக முடியும். எனவே, நீதிமன்ற உத்தரவை சரியான முறையில் காவல்துறையினர் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாகனங்களில் பம்பர்களை அகற்றும்படி,2017 ஆம் ஆண்டு,, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம், அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும், கடிதம் அனுப்பி அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அது குறித்து பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு நவ., 29ல் தமிழக போக்குவரத்து கமிஷனர் சார்பில்,
இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்றம் உத்தரவு பேரில், தற்போது வாகனங்களில் பம்பர்களை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.