அமைச்சரின் பெயரை கூறி மருத்துவ படிப்பில் சீட் வாங்கித் தருவதாக பண மோசடி: கோவையைச் சேர்ந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு!

கோவை: கோவையில் அமைச்சர் பெயரை கூறி மருத்துவ படிப்பில் சீட் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த கோவையைச் சேர்ந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் அமைச்சர் பெயரை கூறி மருத்துவ படிப்பில் சீட் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த கோவையைச் சேர்ந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

பல்லடம் பகுதியைச் சேர்ந்த தனசெல்வன். இவர் தனது மகனுக்கு மருத்துவ சீட் வாங்கி தருமாறு கூறி கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.23 லட்சம் மோசடி செய்துள்ளதாகவும், பணத்தை திரும்பப் பெற்று தரக்கோரியும் கோவையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், தனது மகன் திவ்யேஸ். கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நீட் தேர்விலும் வெற்றிபெற்ற நிலையில், மருத்துவ படிப்பில் சேர்ப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது எனக்குத் தெரிந்த பாலமுருகன் என்பவர் அவருக்கு தெரிந்த நபர் ஒருவர் உள்ளதாக கூறி கோவையைச் சேர்ந்த ஃபிர்தௌஸ் சலாவுதீன் என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அந்த பெண் தன்னுடைய தாயார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அலுவலகத்தில் பணியாற்றுவதாகவும், அதனால் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி முன் தொகையாக ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், மருத்துவ சீட் கிடைக்காததால் அவர் மீது கோவை புலியகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததாகவும் அப்போது ஃபிர்தௌஸ் சலாவுதீன் தான் வாங்கிய பணத்தை திரும்பத் தருவதாக கூறி இருபது லட்சத்திற்கான காசோலை வழங்கினார்

ஆனால், அனைத்து காசோலைகளும் வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்து விட்டதாகவும் அதனால் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத் தரக்கோரி மனுவில் கூறப்பட்டிருந்தது.

சுகாதாரத்துறை அமைச்சரின் பெயரை கூறி மோசடி செய்த கோவையைச் சேர்ந்த பெண் மீது புகார் கொடுத்துள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...