டெல்லி போராடும் விவசாயிகளுக்கு அதரவாக கோவையில் போராட்டங்களை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு

கோவை: தலைநகர் டெல்லியில் புதியதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் குளிர் காரணமாக, உடல் நிலை சரியில்லாத காரணமாக, விபத்து காரணமாக என சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.


கோவை: தலைநகர் டெல்லியில் புதியதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் குளிர் காரணமாக, உடல் நிலை சரியில்லாத காரணமாக, விபத்து காரணமாக என சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவசாயிகளுக்கு அதரவு தெரிவிக்கும் விதமாக, அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



பின்னர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், " "டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவையில் விரைவில் மிகத்தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை காத்திருப்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என பல்வேறு வடிவில் போராட்டங்கள் நடைபெறும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...