தெலுங்குபாளையம் பகுதியில், பழுதான சாலைகளால் மக்கள் அவதி!

கோவை: தெலுங்குபாளையம் பகுதியில், பழுதான சாலைகளால் மழைக்காலத்தில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


கோவை: தெலுங்குபாளையம் பகுதியில், பழுதான சாலைகளால் மழைக்காலத்தில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோவை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில்தென்மேற்கு பருவ மழையைத் தொடர்ந்து புயல் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவையில் கடந்த ஒரு வாரமாகபனிப்பொழிவும் கடுமையான மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில்வாகனத்தில் செல்பவர்கள், மாணவ - மாணவிகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மழையில் நனைந்தபடியே செல்கின்றனர்.

கோவை தெலுங்குபாளையம், ராஜீவ்காந்தி நகர் பகுதியில்தார்ச்சாலை இல்லாத நிலையில் பல்வேறு காரணங்களுக்காக அந்தப் பகுதியில் மண் மற்றும் குழி தோண்டப்பட்ட காரணத்தால் சேறும் சகதியுமாககிடைக்கிறது. ஆகவே, அப்பகுதி மக்கள் இங்குள்ள சாலையைக் கடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். கணுக்கால் அளவுக்குமண் பதிகிறது. ஆதலால்இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை அழைத்தால் அந்தப் பகுதிக்கு வர மறுக்கின்றனர்.மேலும் அப்பகுதி மக்கள் மருத்துவமனை மற்றும் கடைத் தெருவுக்குச் செல்ல மிகுந்த சிரமப்படுவதாக தெரிவித்தனர். மேலும் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வரவும் முடியவில்லை. அதனால் பொதுமக்களின் நிலைமையைகருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...