திருப்பூர்: நிலுவையில் உள்ள சம்பளத்தொகையை வழங்கக்கோரி திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 500–க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் இந்தப் பணியாளர்களுக்கு மாதச்சம்பளம் தலா ரூ. 9 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதமாக ஒப்பந்த நிறுவனம் சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் இன்று பணிக்கு வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனடியாக கொடுத்தால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என கூறினர்.