கோவை: கோவையில் அதிகாலையில் செங்கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி பிரேக் பிடிக்காததால் நிலைதடுமாறி ஆட்டோமீது மோதியதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. ஓட்டல் காம்பவுண்ட் சுவர் இடிந்தது.

கோவை தடாகம் சாலைப் பகுதியில் செங்கல் சூளைகள் இருப்பதால் இரவு 3 மணிக்கு மேல் காலை 7 மணி வரை அப்பகுதியில் லாரிகளில் செங்கல் ஏற்றிச் செல்லப்படுகிறது. அதிகாலை வேளை என்பதால் லாரிகள் மின்னல் வேகத்தில் செல்வது வழக்கம். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் செங்கல் லாரிகள் மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் விபத்துக்குள்ளாகி உள்ளனர். அதில் 5 - க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட கலெக்டரிடம் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படல்லை.
லாரிகளை இயக்கும் டிரைவர்களிடையே எத்தனை லோடு செங்கல் ஏற்றி இறக்க முடியும் என்ற போட்டி நடக்கிறது. பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் டிரைவர்கள் செயல்படுவதால் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை கோவை எம்.எஸ்.ஆர்.ஆர் ரோட்டில் செங்கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று மின்னல் வேகத்தில் சென்றது. அப்போது அந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. டிரைவர் பிரேக் போட்டும் பிடிக்கவில்லை. இதையடுத்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது லாரி மோதியதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் அப்பகுதியில் இருந்த ஓட்டல் காம்பவுண்ட் சுவரில் மோதியதில் சுவர் இடிந்து தரை மட்டமானது. இதையடுத்து லாரியின் வேகம் குறைந்து லாரி நின்றது. இந்தச் சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
அதிகாலையில் அதிவேகத்தில் சென்ற லாரியால் ஏற்பட்ட இந்த நிகழ்வு குறித்து நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் சாய்பாபாகாலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரி உரிமையாளர் மற்றும் கிளீனரை அழைத்து விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து பகுதி மக்கள் செங்கல் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.