தற்கொலைக்கு முயன்ற மனநலம் பாதித்தவர் மீட்பு: குடும்பத்தினரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு!

கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயன்றார். அதைப் பார்த்த காவலர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி பத்திரமாக குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். அவர்கள் காவலருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயன்றார். அதைப் பார்த்த காவலர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி பத்திரமாக குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். அவர்கள் காவலருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கோவை மாவட்டம், ஆழியார் அணையில் குதிக்கும் நோக்கத்தில் ஒருவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்துப்பணியில் இருந்த தலைமைக்காவலர் பிரபு உடனடியாக விரைந்து சென்று அவரை மீட்டு விசாரணை செய்தார். விசாரணையில் அவர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் மனவிரக்தியில் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை வரவழைத்து அறிவுரை வழங்கி அவரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பத்திரமாக மீட்டுக் கொடுத்த தலைமைக்காவலருக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...