கோவை: ஏணியிலிருந்து வழுக்கி விழுந்த முதியவர் படுகாயமடைந்தார். பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கோவை ஒத்தக்கால் மண்டபம், மாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 70). இவர் தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மழைக்காலங்களில் கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகுவதால் நேற்று இவர் தனது வீட்டின்மீது ஏணியை வைத்து கூரையை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே வழுக்கி விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.