சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபரின் கை உடைப்பு: பொதுமக்கள் ஆத்திரம்!

கோவை: சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபரின் கையை பொதுமக்கள் உடைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபரின் கையை பொதுமக்கள் உடைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை நீலம்பூர் அருகே உள்ள குளத்துக்கரையைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவருக்கு பெற்றோர் இல்லாததால் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்கிற குஞ்சான் வயது (வயது 26) என்பவருடன் அந்தச் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. கூலி வேலை செய்து வரும் இவருக்குத் திருமணமாகவில்லை. சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது சதீஷ்குமார் அங்கு சென்று சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

இது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்தது. மேலும் நடக்கும் சம்பவங்களை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்தாராம். நேற்று முன்தினம் சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது அங்கு சென்ற சதீஷ்குமார் மீண்டும் அந்தச்சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் அவரது இடதுகையை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்தச்சிறுமி சதீஷ்குமார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து குழந்தைகள் நல அமைப்பினர் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சதீஷ்குமாரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்கள் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த சதீஷ்குமாரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...