வெவ்வேறு சம்பவத்தில், மில் அதிபர் தற்கொலை, மாற்றுத்திறனாளி பெண் பூச்சி மருந்து குடித்து சாவு!

கோவை: தந்தையுடன் கோபித்துக்கொண்ட மில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார். கவனிக்க ஆள் இல்லாததால் மாற்றுத்திறனாளி பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: தந்தையுடன் கோபித்துக்கொண்ட மில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார். கவனிக்க ஆள் இல்லாததால் மாற்றுத்திறனாளி பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் பற்றிய விவரம் வருமாறு:

கோவை கே.கே.புதூர் அருகே உள்ள அருணாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் கங்காராம் பட்டேல். இவரது மகன் பிரபு ஜி பட்டேல் (வயது 40). இவர் தனது தந்தை நடத்திவரும் மர அறுவை ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கங்காராம் ஆலை நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் தனது மகனிடம் கொடுத்து கவனித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இது பிரபுஜி படேலுக்கு பிடிக்காததால் ஆத்திரமடைந்த அவர் தனது தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரபுஜி பட்டேல் நேற்று லாட்ஜ் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது அறையில் பிரபுஜி பட்டேல் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்துகொண்ட பிரபுஜி பட்டேலின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம் சிறுமுகை, பள்ளிபாளையம், கலைஞர் நகரைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 65) கூலித்தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள், இவர்களது மகள் ராணி (35), மாற்றுத்திறனாளி. மனோகரனுக்கு பக்கவாதம் ஏற்பட்டு கை, கால் செயலிழந்துவிட்டன. மாற்றுத்திறனாளி மகள் மற்றும் பக்கவாதத்தால் பாதித்த கணவர் என 2 பேரையும் பழனியம்மாள் கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பழனியம்மாள் இறந்து விட்டார். அதன் பின்னர் அவர்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தனர். இதனால் தந்தை-மகள் இருவரும் மனவேதனையுடன் இருந்துவந்தனர்.

நேற்று முன்தினம் ராணி தனது தந்தையிடம், `நம்மை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. நமது ஒரே உறவான தாயும் இறந்து விட்டார். இனி நாம் எதற்காக வாழ வேண்டும்' என்று கூறியதுடன் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். சரி என்று கூறி இருவரும் வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தனர். வெகுநேரமாக வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த பக்கத்துக்கு வீட்டைச் சேர்ந்த வசந்தாமணி என்பவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது இருவரும் விஷம் குடித்து மயங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி இன்று பரிதாபமாக இறந்தார். மனோகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...