பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் சாக்கடை கழிவுகளை கொட்ட முயன்ற லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலை விரிவாக பணிகள் நடந்து வருகிறது. இதில், பொள்ளாச்சி - உடுமலை சாலை, மரப்பேட்டை பகுதியில் பாலம் விரிவாக்க பணிகள் துவங்கிய நிலையில், அதற்கான முதற்கட்ட பணியாக பாலத்திற்கு அடியில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அங்கிருந்து அகற்றப்பட்ட கழிவுகள் மூன்று லாரிகள் மூலமாக பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் கொட்ட முயற்சித்த போது, ஒரு லாரி பாரம் தாங்காமல் சாய்ந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அங்கே சென்று பார்த்தபோது, கழிவுகள் கொட்ட முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மூன்று லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் போலீசார் விசாரணை நடத்தியதில், பாலம் கட்டும் பணிக்காக அகற்றப்பட்ட கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது.

பின்னர், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், இந்த கழிவுகளை கொட்ட வந்த லாரிகளை கையகப்படுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கழிவுகள் மட்டுமல்ல மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள், கட்டிட கழிவுகள் என அனைத்து கழிவுகளும் இந்த பகுதியில் கொட்டப்படுகிறது, என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த லாரிகளை இயக்கி வந்த வேலுசாமி, சிவகுமார், வடிவேலு ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த நெகமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது போன்ற கழிவு பொருட்களை கொட்டாமல் தடுக்க இரவு நேர ரோந்து பணிகளை காவல்துறையினர் துரிதப்படுத்த வேண்டும், என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.