கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை நாளையும் நீடிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

கோவை உக்கடம், காந்திபுரம், சுந்தராபுரம், துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கண்பாளையம், பீளமேடு, சிங்காநல்லூர், டவுன்ஹால், செல்வபுரம், சுங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மிகவும் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மழையில் வாகனத்தை இயக்குவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வருவது வடகிழக்கு பருவமழையாகும். கடந்த அக்டோபர் மாதம் துவங்கி தற்போதுவரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு சராசரியாக 315 மி.மீ. வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சிமையத் தலைவர் ராமநாதன் கூறுகையில், ‘‘ கோவையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை, வடகிழக்கு பருவமழையின் தாக்கமே. பருவமழை இன்னும் நிறைவடையவில்லை. நாளையும் கோவை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது’’ என்றார்.