தி.மு.க.வினர் மீதான கொலை வழக்குகள் குறித்து விசாரிக்க ஆணையம்: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிவிப்பு!

கோவை: அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க.வினர் மீதான கொலை வழக்குகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.


கோவை: அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க.வினர் மீதான கொலை வழக்குகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.



கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, `பிரிந்த கட்சியை ஒன்று சேர்த்ததால் கோபத்தில் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார். மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க தி.மு.க.வினர் நினைக்கின்றனர். எப்போதும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது. அதை அவரது அண்ணன் அழகிரியே சொல்லிவிட்டார்' என்றார்.



இதையடுத்து பேசிய அ.தி.மு.க. துணை கொள்கைபரப்புச் செயலாளரும், நடிகையுமான விந்தியா, `மக்களுக்காக வாழ்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அடுத்தவர்களை குறை சொல்லி வாழ்வபர் புளுகுமூட்டை ஸ்டாலின். யார் கேட்டாலும் பதில் சொல்பவர்தான்எங்கள் தலைவர். எழுதிக் கொடுத்ததை சொல்லும் தலைவரல்ல எங்கள் தலைவர்.400 வருடமானாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது. தி.மு.க. இல்லையென்றாலே கலெக்ஷன், கரப்சன், கமிஷன் எதுவும் இருக்காது. அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரமில்லை. தி.மு.க. ஒரு கட்சியல்ல, ஒரு குடும்ப கம்பெனி.தி.மு.க.வை இந்தத் தேர்தலுடன் ஒழித்துக் கட்டுவோம்' என்றார்.



இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். ``ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் வேலுமணியை விடமாட்டோம் என ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலினை நாங்கள் விடமாட்டோம். ஒன்றரை லட்சம் கோடி சொத்து ஸ்டாலினுக்கு உள்ளது. ஊழல் என்றாலே தி.மு.க.தான். ஊழல் நாயகன் என்றால் ஸ்டாலின் தான். ஸ்டாலின் படத்தில் வேண்டுமானால் முதலமைச்சராக நடிக்கலாம். ஸ்டாலின் ஒரு விஷப் பாம்பு. வன்முறையும், தி.மு.க.வும் ஒன்றாகப் பிறந்தது. அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் தி.மு.க.வின் கதையை இந்தத் தேர்தலுடன் முடிக்க வேண்டும். இஸ்லாமியர்களை ஸ்டாலின் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்; ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க.வினர் செய்த கொலை வழக்குகள் தொடர்பாக விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைக்கப்படும்''. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...