கோவை: கோவை மாவட்டத்திற்கு மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக 269.83 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கியிருக்கிறார் என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.
கோவை: கோவை மாவட்டத்திற்கு மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக 269.83 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கியிருக்கிறார் என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.
கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில்பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று காலைதுவக்கி வைத்தார். அப்போது பொங்கல் பரிசுப் பொருட்களுடன் 2,500 ரூபாயும் பொதுமக்களுக்குவழங்கப்பட்டது. இதையடுத்து மக்கள் மத்தியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். ``கோவை மாவட்டத்தில் 10,11,845 குடும்பத்துக்கு இந்த பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்படுகின்றது. கொரோனா காலத்தில் மக்கள் நெருக்கடியில் இருப்பதால் தமிழக முதல்வர், பொங்கல் பரிசுத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி இருக்கின்றார். பொங்கல் தொகுப்பில் முதலில் கரும்புத் துண்டு கொடுக்கப்பட்டது, இப்போது முழு கரும்பாக கொடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 2.6 கோடி குடும்பத்தினருக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகின்றது.
ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது 100 ரூபாய் கொடுத்து இந்த பரிசுத் தொகுப்புத் திட்டத்தைதுவக்கி வைத்தார். நெருக்கடியான சூழலை கருத்தில்கொண்டு 2,500 ரூபாய் வழங்க முதல்வர் உத்திரவிட்டுள்ளார். மக்களுடன் மக்களாக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராகியிருக்கிறார். அதானால் அவர் எளிமையாக இருக்கிறார். ஒரே குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வருபவர்களுக்கு, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக முதல்வர்மக்கள் பணியாற்றுகின்றார். குடிசையில் போய் டீ சாப்பிடுகிறார்.2,500 ரூபாய் மக்களுக்கு வழங்குவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒரு கும்பல் காத்திருக்கிறது. எந்த தடைகள் வந்தாலும் மக்களுக்கு 2,500 ரூபாய் சென்று சேரும். சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கின்றேன், உங்களுக்கும் சேர்த்து இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு பேசிய அமைச்சர் வேலுமணி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், `ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் அறிவித்து முதல்வர் துவக்கி வைத்துள்ளார். கோவை மாவட்டத்திற்கு மட்டும்269.83 கோடி பொங்கல் தொகுப்பிற்காக முதல்வர்ஒதுக்கியுள்ளார். முதல்வர் 2,500 ரூபாய் கொடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.மு.கஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என்று மு.க.அழகிரி சொல்லி இருக்கிறார். அதுதான் நடக்கப்போகிறது. எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்வர்' என்றார்.