மு.க.அழகிரி கூறியதைப் போல ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

கோவை: தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு சார்பில் நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு 2500 ரூபாய் மற்றும் கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் மற்றும் இலவச வேஷ்டி,சேலை வழங்கப்பட்டு வருகிறது.


கோவை: தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு சார்பில் நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு 2500 ரூபாய் மற்றும் கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் மற்றும் இலவச வேஷ்டி,சேலை வழங்கப்பட்டு வருகிறது.



இன்று பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 103 நியாயவிலை கடைகளில் 55,258 குடும்ப அட்டை பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 1,2 வார்டு, வடுகபாளையம் பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் தொடங்கி வைத்தனர்.



அப்போது 2500 ரூபாய், கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களுக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டியின்போது, முதலில் மு.க.ஸ்டாலின் மீது உள்ள ஊழல் புகார்களுக்கு அவர் பதில் சொல்லவேண்டும், அமைச்சர்கள் மீது ஆதாரமில்லாமல், நடைபெறாத ஒப்பந்தங்களை நடைபெற்றதாக சொல்லி, ரத்து செய்த டெண்டர்களை நடந்ததாக கூறி, நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறார், என்று குற்றம் சாயினார்.

ஸ்டாலின் முதல்வர் கனவு ஒரு போதும் பலிக்காது. அவர் அண்ணன் மு.க.அழகிரி கூறியதைப்போல, ஸ்டாலின் ஒருபோதும் தமிழகத்தின் முதல்வராக முடியாது, என்று தெரிவித்தார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...