வன எல்லையில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயிக்கு அபராதம்!

கோவை: வன எல்லையில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.



கோவை: வன எல்லையில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேத்துமடை அருகே வன எல்லையை ஒட்டியுள்ள ஒரு தோட்டத்தில், சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாக, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போத்தமடை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு தோட்டத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் இரட்டைமடை பகுதியைச் சேர்ந்த ஷாஜு என்பவரது தோட்டத்தை, செமனாம்பதி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் கார்த்திகேயன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதும், அவர் சட்டவிரோதமாக அங்கு வன எல்லையைச் சுற்றியும் மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலிகளை, அப்புறப்படுத்திய வனத்துறை அதிகாரிகள், தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து ரூ.50,000 அபராதம் தொகை வசூலித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...