வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்!

கோவை: வீட்டின் உள்ளே அழுகிய நிலையில் மில் தொழிலாளி பிணமாகக் கிடந்தார்.


கோவை: வீட்டின் உள்ளே அழுகிய நிலையில் மில் தொழிலாளி பிணமாகக் கிடந்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பால் மார்க்கெட்டை அடுத்த என்.டி.சி பிரிவைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 34). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சண்முகம் அந்தப் பகுதியில் உள்ள என்.டி.சி.மில்லில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா காரணமாக மில்லுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் மனைவியின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 29-ம்தேதி மில் திறக்கப்பட உள்ளது என்பதை அறிந்ததும் சண்முகம் மட்டும் கோவை வந்தார்.

புத்தாண்டு தினத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சண்முகம் அதன் பின்னர் வெளியே வரவில்லை. இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினர். அப்போது கதவு தானாக திறந்து கொண்டது. இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சண்முகம் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். தகவலறிந்த ஆர்.எஸ் புரம் சப்-இன்ஸ்பெக்டர் மெய்யப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...