`கோவையின் இரும்பு மனிதர்' எவரெஸ்ட் ஏ.சோமசுந்தரம் நூல் வெளியீட்டு விழா!

கோவை: எவரெஸ்ட் குழுமத்தின் சேர்மன் எவரெஸ்ட் சோமுவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்த விழாவில் எவரெஸ்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் படங்கள் எல்.இ.டி திரையில் காண்பிக்கப்பட்டன. விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் எவரெஸ்ட் குழுமத்தைச் சேர்ந்த அலுவலர்கள், தொழிலாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் டாக்டர் மேகலா சேகர் வரவேற்றார்.


கோவை: எவரெஸ்ட் குழுமத்தின் சேர்மன் எவரெஸ்ட் சோமுவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்த விழாவில் எவரெஸ்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் படங்கள் எல்.இ.டி திரையில் காண்பிக்கப்பட்டன. விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் எவரெஸ்ட் குழுமத்தைச் சேர்ந்த அலுவலர்கள், தொழிலாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் டாக்டர் மேகலா சேகர் வரவேற்றார்.



முக்கிய நிகழ்வாக `கோவையின் இரும்பு மனிதர்' (The Iron Man of Coimbatore) எவரெஸ்ட் ஏ.சோமசுந்தரம் என்ற நூலினை விழாக்குழு தலைவர் பிரம்மச்சாரி விக்னேஷ் சைத்தன்யா ஜி (சின்மயா மிஷன், கோவை) வெளியிட, கொடிசியா முன்னாள் தலைவர் எம்.கந்தசாமி மற்றும் விருந்தினர்கள் நூலினைப் பெற்றுக் கொண்டனர்.

விழாக்குழு தலைவர் விக்னேஷ் சைத்தன்யா ஜி பேசும்போது, எவரெஸ்ட் சோமுவின் கடின உழைப்பு, நேரம் தவறாமை, பொருள்களின் தரம் மற்றும் அவர் பெற்ற பதக்கங்கள், பாராட்டுக்கள் குறித்தும் பேசினார்.பி.ஏ.ராஜு செட்டியார், சன் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ஸ்ரீ. ராஜேஷ் கோவிந்தராஜுலு, கொடிசியா முன்னாள் தலைவர் எம்.கந்தசாமி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் வி.ராமச்சந்திரன், பாரதியார் பல்கலைக்கழக சுற்றுச் சூழலியல் துறை முன்னாள் தலைவரும், கற்பகம் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளருமான டாக்டர் பி.லஷ்மண பெருமாள்சாமி, எம்.எஸ்.எம்.இ. இரண்டாம் நிலை துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.மயில்சாமி, பிரிமியர் பிளேட் பேஃப்ரிகேஷன் நிர்வாக இயக்குனர் எஸ்.எம்.சதாசிவம், எவரெஸ்ட் சோமுவின் முன்னாள் உதவியாளர் கே.அண்ணாமலை எவரெஸ்ட் சோமுவின் சிறந்த செயல்பாடுகள் குறித்து பேசினர். மேலும் எவரெஸ்டில் பணியாற்றியபோது தாங்கள் அவரிடம் பெற்ற அனுபவங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.

இதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் என்.செல்வராஜ், `உழைப்பு' என்ற தலைப்பில் உழைப்பினால் கிட்டும் உயர்வு, மேன்மை, சிறப்பு குறித்தும் பேசினார். வருகை புரிந்த அனைவருக்கும் எவரெஸ்ட் ஏ.சோமசுந்தரத்தின் பேத்தி எம்.லஷ்மிதா நன்றி கூறினார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...