கோவையில் கிராம சபை கூட்டத்தில் பெண்ணை தாக்கியதற்கு ஸ்டாலின் பதில் சொல்லியாக வேண்டும் - அமைச்சர் எஸ் பி வேலுமணி

கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில் நேற்று திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராம மக்கள் சபை கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்டு, கூச்சலிட்ட அதிமுகவைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில் நேற்று திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராம மக்கள் சபை கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்டு, கூச்சலிட்ட அதிமுகவைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து, அந்த பெண் தன்னை திமுகவினர் ஒன்று கூடி தாக்கியதாகவும், அதனால் தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக, ஒரு அதிமுக அமைச்சரிடம் பேசுவதுபோல் ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இது வேண்டுமென்றே அதிமுகவால் தீட்டப்பட்ட சதி என்று திமுகவினர் குற்றம் சாட்ட வருகின்றனர். மேலும், இது குறித்து சென்னை டி ஜி பியிடம் திமுகவின் ஆர் எஸ் பாரதி புகார் ஒன்றையும் நேற்றையதினம் அளித்துள்ளார்.

இதையடுத்து, திமுக தொண்டர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும், அந்த பெண்ணை நேரில் பார்த்து ஆறுதல் கூறிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி.வேலுமணி நேற்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில்:

திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராம சபைக் கூட்டம் என பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார் எனவும் தொண்டாமுத்தூர் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவிலை மறித்து மேடை அமைத்துள்ளனர் எனவும் குற்றம் சாட்டினார்.

தாழ்த்தப்பட்டவர்களை தாக்கும் திமுக..!

மேலும், கோவிலுக்கு சென்றபோது பூங்கொடி என்பவர் திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, திமுக தலைவர் ஸ்டாலின் பதில் சொல்லாமல் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது திமுகவினர் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக, விமர்சித்தார். இது மோசமான செயல் எனக் குறிப்பிட்ட அமைச்சர், வெறிக்கொண்டு தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றார்.

ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும்..!

திமுக ஆட்சிக்கு வந்தால் இப்படி தான் நடக்கும் எனவும் இந்த தாக்குதலுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியாக வேண்டும். திமுகவினரால் 5 பேர் தாக்கப்பட்டுள்ளனர், தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுகவினரை திட்டமிட்டு அக்கூட்டத்திற்கு அனுப்பவில்லை

ஸ்டாலின் பதவி வெறி பிடித்து அலைகிறார். எப்போதும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. நாங்கள் அதிமுகவினரை திட்டமிட்டு அக்கூட்டத்திற்கு அனுப்பவில்லை, அதுபோன்ற கீழ்தரமான எண்ணம் எங்களுக்கு கிடையாது. அக்கூட்டத்திற்கு எங்களிடம் சொல்லி விட்டு செல்லாததால் தான் அவர்களை தாக்குதலில் இருந்து எங்களால், காப்பாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுவிட்டதாக, அமைச்சர் தெரிவித்தார்.

ஊழலை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார்..!

ஏற்கனவே, கூறியதைப் போல ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் இப்போதே பதவிகளை ராஜினாமா செய்ய தயார் எனவும் இல்லையெனில் திமுக தலைவர் ஸ்டாலின் தன் பதவிகளை விட்டுத்தர தயாரா? எனவும் கேள்வி எழுப்பிய அமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் தான் ஊழல் மன்னன், என தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பக்திமான்

இது போன்று தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டால் தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரித்த அமைச்சர் எஸ் பி வேலுமணி, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதிமாறன் தாழ்த்தப்பட்ட மக்களை ஏற்கனவே இழிவாக பேசியவர்கள் எனவும் கூறினார். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பக்திமான் எனவும் பெண்களுக்கு மரியாதை அளிப்பவர், என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...